திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ளே இன்று காலை கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி கவர் ஆகியவை கடந்துள்ளதை கண்ட பொதுமக்கள் மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் கைத்துப்பாக்கியை கைப்பற்றி, துப்பாக்கியை கோவிலுக்குள் வீசி சென்றவர்கள் மர்ம நபர்கள் யார் என்பதும் குறித்தும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கோவிலுக்குள் கிடந்த துப்பாக்கி குறித்து திருச்சி துப்பாக்கி பராமரிப்பு பிரிவிலிருந்து துப்பாக்கியை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோவிக்குள் துப்பாக்கி கடந்ததை காண சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் வந்து சென்றததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments