டாப்லைட் குழுமம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள “Utmost Sports wear” மற்றும் “Hima”பெண்கள் ஆடைகளுக்கு Brand Ambassadar ஆக சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆடைகளின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
பிரத்யேக ஆடைகளை நிறுவனத்
தலைவர் N. வேலுச்சாமி வெளியிட வீராங்கனை தனலட்சுமி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த தனலட்சுமி… ஒவ்வொரு ஊரிலும் விளையாட்டு மைதானங்களில் அடிப்படைத் தேவைகள் மேம்படுத்தப்பட்டால் நம் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வர பேருதவியாக இருக்கும்.
திருச்சியில் உள்ள ராக்போர்ட் அகாடமியின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளைப் குறித்தும் பேசினார். பின்னர் பேசிய டாப்லைட் நிறுவனத்தலைவர் N. வேலுச்சாமி ராக்போர்ட் அகடாமியின் அடிப்படை வசதிகளையும் தேவைகளையும், டாப்லைட் நிறுவனமே பூர்த்தி செய்யும் என்றும்,


அத்துடன் 2022ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுகள் அதை தொடர்ந்து வரும் காமன்வெல்த் போட்டிகள் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலும் தனலட்சுமி பங்கேற்கவும் வெற்றி பெறவும் அனைத்து வகையிலும் டாப்லைட் நிறுவனம் துணைநிற்கும் எனவும் N. வேலுச்சாமி உறுதியளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn






Comments