தமிழ்நாடு காவல்துறையில் மாநகர மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் அந்த காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக முதலமைச்சர் கோப்பை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 2019 ஆம் ஆண்டில் சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழக முதலமைச்சர் கோப்பை காவல்நிலையங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகர கோட்டை சட்டம் – ஒழுங்கு காவல் நிலையம் 16 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் கோப்பையை திருச்சி மாநகர காவல் ஆணையர் இன்று காவல் ஆய்வாளர் சண்முகவேலிடம் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சக்திவேல், கோட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையர் சுப்பிரமணியன், கோட்டை காவல் ஆய்வாளர் தயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments