திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் திருச்சிராப்பள்ளி, திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 27.09.2021-ம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலையிடம், உதவி ஆணையர் கலால் மற்றும் மண்டல துணை இயக்குநர், அரசு தானியங்கி பணிமனை ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் டெபாசிட் (முன்வைப்புத் தொகை) தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2000ம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு டெபாசிட் (முன்வைப்புத் தொகை) தொகையாக ரூ.4,000ம் செலுத்தி ஏலம் கோர வேண்டும், ஏலத்தொகையுடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும். ஏலம் கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் திருச்சிராப்பள்ளி, திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 27.09.2021-ம் தேதிக்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி
தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments