திருச்சி மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 2 கிராம பஞ்சாயத்து தலைவர், 19 கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என மொத்தம் 24 உள்ளாட்சி பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இறுதி நாளான நேற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 27 பேரும், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 4 பேரும், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 19 பேரும் என மொத்தம் 54 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 24 உள்ளாட்சி பதவிகளுக்கு 74 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் 25ம் தேதி, வாக்கு பதிவு அக்டோபர் 9ம் தேதி, வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி, பதவி ஏற்பு 20ம் தேதியும் நடைபெற உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments