திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், முசிறியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமர், துளசிமணி தம்பதியரின் மகள் செல்வி.சம்பூரணம் (வயது 23) என்பவர் இரண்டு கால்கள் பாதிப்படைந்து நடக்க இயலாத நிலையில் மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து சக்கர நாற்காலி கேட்டு இன்று (27.09.2021) மனுவினை வழங்கினார்.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ரூ.7500/- மதிப்புள்ள சக்கர நாற்காலியினை இரண்டு கால்களும் செயலிழந்த செல்வி.சம்பூரணத்திற்கு இன்று வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பயனாளி செல்வி.சம்பூரணம் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.சந்திரமோகன் உடனிருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments