Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“திருச்சி காந்தி சந்தை விவகாரத்தில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்” – கே.என்.நேரு பேட்டி

“எல்லோரும் நம்முடன்” என்ற பெயரில் இணையதளம் வாயிலாக திமுக வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி திருச்சியில் நடைபெற்றுவருகிறது. இதற்கான எல்.இ.டி திரை கொண்ட பிரச்சார வாகனத்தை திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்பாட்டின் பேரில், திமுகவின் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது பகுதி கழக செயலாளர்கள், மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த இணையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் கடந்த 6 தினங்களாக நடைபெற்று வரும் நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு இன்று திருச்சி மாவட்டத்தில் உறையூர், கருமண்டபம்,
பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் மற்றும் ஜீயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இணைய வழி உறுப்பினர் சேர்ப்பு முகாமை துவக்கி
வைத்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே .என் .நேரு…

திருச்சி காந்தி சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சில்லறை வியாபாரிகள் உள்ளனர். எனவே 100 ஆண்டு பழமை வாய்ந்த காந்தி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது சரியாக இருக்காது. திமுக ஆட்சிக்கு வந்தால் காந்தி சந்தை பழைய இடத்திலேயே செயல்படும்
என குறிப்பிட்டார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் இதே கருத்தை கூறியுள்ளார். அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

காந்தி சந்தையை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது. அந்த சந்தை அதே இடத்திலேயே இயங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரத்தை திருச்சி மாவட்டத்தின் புறநகருக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்ட பலர் அதிமுகவில் பிரச்சனை இல்லை என கூறுகின்றனர். ஓபிஎஸ், இபிஎஸ் உரசல் விவகாரம், வரும் 28 ஆம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் தெரியும். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே தீரும்”
என்றார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *