தமிழக காவல்துறையைில் சட்டம் ஒழுங்கு, ஊர்க்காவல், ஆயுதப்படை, சிறப்பு படை, உளவுத்துறை, பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு, என பல உட்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் முதல் நிலை, இரண்டாம் நிலை, தலைமை காவலர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் என காவல்துறையில் மொத்தமாக 1.25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
 இவர்களின் குறைகள்,  பணியிட மாறுதல், ஊதிய குறைபாடு போன்றவற்றை தெரிவிப்பதற்காக காவல்துறையினருக்கு குறைத்தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இந்த முகாம் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் செப்டம்பர் 30-ம் தேதியும், வருகிற அக்டோபர் மாதம் 15 ஆகிய தேதிகளில் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்தர பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

 அதன்படி இன்று திருச்சி மாவட்ட காவல்துறையினர்க்கான குறை தீர்க்கும் முகாம் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி கலந்து கொண்டு, காவலர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 50 பெண் காவலர்கள் உள்பட 140 பேர் தங்களது குறைகளாக பணியிடமாற்றம், ஊதிய குறைபாடு, தண்டனை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 30 Oct, 2025
30 Oct, 2025                           500
500                           
 
 01 October, 2021
 01 October, 2021

Comments