திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜீவ். இவர் கடந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். 2016 டோகியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் கலப்பு தொடர் ஓட்டம் என இரண்டு பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இவர் பணிபுரிந்து வரும் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் வளாகத்திலுள்ள தங்கராஜ் மைதானத்தின் ஒரு பகுதிக்கு (பார்வையாளர் மாடம்) ஆரோக்கியராஜீவ் பெயரை சூட்டிக் கௌரவப்படுத்தி உள்ளது இந்திய ராணுவம்.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆரோக்கியராஜ் வெலிங்டன் ராணுவ மைதானத்தில் உள்ள தனது பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து பெரிதாக தோல்வியடைய துணிந்தவர்களால் மட்டுமே எப்போதும் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments