பொன்மலையில் கலக்கும் கட்டை பேட் விளையாட்டு
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல இடங்களில் தங்கியிருந்தனர். அதில் ஒன்று திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியாகும். இங்கு வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஓய்வு நேரங்களில் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுடன் பூப்பந்தாட்டம் விளையாடுவார்கள். பந்துக்கான மட்டை நரம்பு வலையால் பின்னப்பட்டு வெள்ளைக்காரர்கள் ஆ...... என கத்திக்கொண்டே குதித்து, குதித்து விளையாடுவதை வேடிக்கைப் பார்த்து வியந்த நம்ம... ஆட்கள் சும்மாயிருப்பார்களா?
இந்த விளையாட்டை விளையாட ஆசைப்பட்டவர்களுக்கு தேவையான பேட் வாங்க பொருளாதாரம் இடம் தராததால் பிறந்த ஐடியாவே. கட்டை பேட் முதலில் அட்டையை பேட்டாகவும், துணிகளை கருட்டி, உருட்டி பந்தாகவும் பயன்படுத்த நாளடைவில் மர பலகை. பிளைவுட் என உருமாற்றம் பெற்று இன்றளவும் திருச்சி பொன்மலை பகுதியை கலக்கி வருகிறது கட்டை பேட் விளையாட்டு.
ஏராளமான ரசிகர்களை கொண்ட இந்த கட்டை பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடும் போது கட்டை பேட்டில் பந்து படும் போது எழுந்திடும் ஓசை பார்த்து ரசிப்பவர்களுக்கு உற்சாகத்தையும், பரவசத்தையும் உண்டாக்கும் என்கிறார்கள் கட்டை பேட் ரசிகர்கள்.
பொன்மலை ரயில்வே காலனியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு அருகிலும் கட்ட பேட் மைதானம் கட்டாயம் இருக்கும். இரவு பகல் ஆட்டம் இருவர், ஐவர் அணிகள் என அமைத்து மோதும் கட்டை பேட் விளையாட்டை நடத்த விளையாட்டு கிளப்களும் உண்டு, வெற்றிக்கான பரிசாக பெருந்தொகையும் உண்டு.
இந்திய அளவில் எங்கும் இல்லாத கட்டை பேட் விளையாட்டை வாய்ப்பிருந்தால் ஒருமுறை நேரில் பார்த்து மகிழுங்கள் என்கிறார் கட்டை பேட் விளையாட்டின் தீவிர ரசிகரான மக்கள் சக்தி இயக்கம் கே.சி.நீலமேகம்.
திருச்சி பொன்மலையில் கட்டை (மட்டை) பூப்பந்தாட்டம் போட்டி, நண்பர்கள் குழு 7ஆம் ஆண்டு ஐவர் (5) பகல் நேர ஆட்டம் 9, 10.11.24 இரண்டு நாட்கள் போட்டி பொன்மலை மார்க்கெட் அருகில் நடந்தது. இதில் 9 அணிகள் கலந்துக் கொண்டார்கள். இறுதி போட்டியை மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீல மேகம், சாமிநாதன் தொடங்கி வைத்தார்கள்.
போட்டியின் முடிவு 7 ஸ்டார் அணி 30/22 என புள்ளிகள் பெற்று முதலிடம். நியூ காலனி இரண்டாம் இடம், சிவா அணி முன்றாம் இடம் பெற்றார்கள். முதல்பரிசு ரிச்சர்டு 10000.00, இரண்டாவது பரிசு.ராஜ் 7000.00, முன்றாம் பரிசு . குட்வின் கிரிக்கெட் கிளப் 5000.00 வழங்கினார்கள். மேலும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision