எஸ்.ஆர்.எம் மீது அதிரடி நடவடிக்கை, சங்கம் மீதும் பாயுமா?

எஸ்.ஆர்.எம் மீது அதிரடி   நடவடிக்கை, சங்கம் மீதும் பாயுமா?

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி அரசு நிலத்தில் 30 ஆண்டு கால குத்தகைக்கு எடுக்கப்பட்டு விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் உணவகம் நீச்சல் குளம், பார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் வசதிகளும் உள்ளன. இங்கு விருந்தினர்கள் தங்குவது மட்டுமின்றி திருமணம் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும். 

குறிப்பாக 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விடுதிக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வாடகை ஆரம்ப காலத்தில் செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக வாடகை செலுத்தாமல் எஸ் ஆர் எம் விடுதி நிர்வாகம் 30 கோடி பாக்கி வைத்துள்ளது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் நெருக்கடியால் 12 கோடி ரூபாய் வாடகை மட்டும் செலுத்தியுள்ளனர். 30 ஆண்டுகள் அரசு நிலத்தை குத்தகை எடுத்து அதில் தங்கும் விடுதி நடத்தி வந்த எஸ் ஆர் எம் நிர்வாகத்தின் குத்தகை காலம் நேற்றோடு (14.06.2024) நிறைவடைந்து விட்டது.

இதனால் வாடகை பாக்கி கட்ட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், விடுதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடகை பாக்கியை வசூலிப்பதற்காகவும், இடத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காவல்துறையினருடன் எஸ் ஆர் எம் விடுதிக்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதுப்பற்றி தகவலறிந்த வந்த பா.ஜ.க, ஐ.ஜே.கே கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹோட்டலின் நுழைவாயில் கதவை போலீசார் அடைத்ததால் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் காம்பௌண்ட் சுவரை ஏரி குதித்து உள்ளே வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சங்கம் ஹோட்டல் குத்தகை காலம் நிறைவடைந்து விட்டதாலும், வாடகை பாக்கி வைத்துள்ளதால் அந்த ஹோட்டலை சீல் வைக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இறங்குமா என்று கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. சங்கம், எஸ் ஆர் எம் ஹோட்டலும் இணைந்து தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது என்பது கூடுதல் தகவல்.

எஸ் ஆர் எம் ஹோட்டல் போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சங்கம் ஹோட்டலுக்கும் இதே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நட்சத்திர ஹோட்டல்களையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்த ஒன்றில் இறங்கி விட்டது. சங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது 70 லட்ச ரூபாய் ஆண்டிற்கு குத்தகை பணமாக மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை சங்கம் ஹோட்டல் தரப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை தாங்கள் நடத்துவதற்கு மிகுந்த சிரமம் என்பதையும் நேரடியாக சொல்லிவிட்டதாக தகவல் தற்போது கிடைத்துள்ளது.

 இது போன்று அரசு நிலத்தில் செயல்பட்டு வரும் பல தனியார் நிறுவனங்கள் வாடகை பாக்கி செலுத்தாமலும், குத்தகை காலம் முடிந்த நிலையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்பொழுது எஸ்.ஆர்.எம் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் போன்று தமிழ்நாட்டில் 47 ஹோட்டல்கள் இதுபோன்று குத்தகை காலம் முடிந்து தொடர்ந்து பயன்பாட்டில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision