சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 4 பேரும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை ஆனவர்களில் முருகன், சாந்தன் ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனால், சிறப்பு முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறியதாவது.... அவர்களுக்கு தேவையான நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அவர்கள் அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெளியான தகவல் உண்மையில்லை.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு மத்திய சிறையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலோ, பெயில் வாங்கினாலோ சொந்த நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். குடும்ப உறவுகளோ, உறவினர்களோ சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற்று
தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கலாம். மொபைல் போன் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைத்துக் கொள்ள இங்கு தங்கி இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. தற்போது விடுதலையாகி, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அந்த நாட்டினர் தானா என்பதை உறுதி செய்து எங்களுக்கு தகவல் அனுப்பிய பின் இன்னும் பத்து நாட்களில், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விடுதலை செய்யப்பட்ட நால்வரில ஒருவர் மட்டுமே சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பவில்லை தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO