திருச்சி மாநகரில் நாளை (25.08.2023) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (25.08.2023) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1, 2, 3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K V துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் (24.08.2023) அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது. 

எனவே, மண்டலம் - 1: மேலூர், தேவிஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், TV கோவில், அம்மாமண்டபம், ABIEA நகர், 

மண்டலம் - 2 : சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது,காஜாமலை புதியது, 

மண்டலம் - 3 : அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் பழையது,ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, MK.கோட்டை செக்ஸன் ஆபிஸ், M K. கோட்டை நாகம்மை வீதி, M K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், 

மண்டலம் - 4 : ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ்நகர், LIC காலனி புதியது. LIC காலனி பழையது, கே.சாத்தனூர், விஸ்வநாதபுரம், சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல்நகர் பழையது, தென்றல்நகர் EB காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே.நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, ரெங்காநகர்.

மண்டலம் - 5 : மங்கலம் நகர், சிவாநகர், உறையூர் புதியது, உறையூர் பழையது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு (25.08.2023) அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது. மறுநாள் (26.08.2023) அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision