திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (04.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (04.01.2025) சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்பநகர், ராணுவகாலனி,
பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங் கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி,
கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர் ஆகிய பகுதிகளில் நாளை (04.01.2025) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை ( 04.01.2025) சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் லால்குடி, ஏ.கே.நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ்நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதிநகர்,
வ.உ.சி.நகர், காமராஜ்நகர், பாலாஜிநகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம் பேட்டை, மும்முடிச்சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், சேஷசமுத்திரம், பம்பரம் சுற்றி,
திருமணமேடு தெற்கு, நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (04.01.2024) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், இயக்கலும், காத்தலும் லால்குடி செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision