சமயபுரம் கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்ய ஒரு கோடியே 97 லட்சத்துக்கு ஏலம்

சமயபுரம் கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்ய ஒரு கோடியே 97 லட்சத்துக்கு ஏலம் மூன்று முறை சர்ச்சையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஏலம் நான்காவது முறையாக ச. கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்று முடிந்ததுபிரச்சித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் பேருந்து, சுற்றுலா வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கோவில் அமைந்திருப்பதால் கோவில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் பொருட்டு கோவிலுக்கு வரும் வாகனங்களிடம் சுங்க வரி வசூல் செய்யப்படும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்படுகிறது.ஏலம் எடுக்கும் நபர் முதல் ஆண்டு ஏலத்தொகையை செலுத்தி ஏலத்தை எடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து வரும் இரண்டு வருடங்களில் 5 சதவீதம் உயர்த்தி ஏலத்தொகையை செலுத்தி வேண்டும் என நிர்ணயிக்கப்படும்.2025-2026 ஆம் ஆண்டுக்கான ஏலத்தை நடத்த முன்னதாக மூன்று முறை பேரூராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தபோது தொடர் சர்ச்சையின் காரணமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நான்காவது முறையாக நடைபெற்ற வாகன வரி வசூல் செய்யும் ஏலம் ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு விலைப்புள்ளியில் ஒப்பந்தம் கோரினர். இறுதியாக ஒரு கோடியே 97 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் வாகன வரி வசூல் ஏலம் விடப்பட்டு ஏலம் நிறைவுற்றது.
சமயபுரம் கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி வசூல் தொகை பின்வருமாறு:-
1. டவுன் பஸ் நாள் ஒன்றுக்கு 5 ரூபாய்
2. சுற்றுலா பேருந்து நாள் ஒன்றுக்கு 150 ரூபாய்
3. சுற்றுலா வேன் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய்
4. கார் நாள் ஒன்றுக்கு 40 ரூபாய்
5. ஆட்டோ ரிக்ஷா நாள் ஒன்றுக்கு 10 ரூபாய்
6. டிராக்டர் லாரி நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்
7. டாடா சுமோ, குவாலீஸ் 50 ரூபாய்
8. டாடா ஏஸ் 75 ரூபாய்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision