தமிழக முதல்வரை கண்டித்து பாஜகவினர் கருப்புக்கொடி போராட்டம்

தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா கர்நாடக, முதல்வர்களுக்கு வரவேற்பு அளித்தும், தமிழக மக்களை குடிகாரர்கள் ஆக்கிய முதல்வரை கண்டித்து பாஜகவினர் கருப்புக்கொடி போராட்டம்
தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுதராமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க தவறியதுடன், தொகுதி மறுவரையைறைக்கு எதிராக திமுக நடத்தும் நாடகத்தில் கர்நாடக முதல்வர் டி .கே சிவகுமார், கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு தமிழகத்தில் சிகப்பு கம்பளம் வரவேற்பளிப்பதை கண்டித்தும், டாஸ்மாக்களை திறந்து தமிழக மக்களை குடிகாரர்கள் ஆக்கிய ஸ்டாலினை கண்டித்து பாஜக மாவட்ட அலுவலகத்தில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான கருப்பு சட்டை மற்றும் கையில் கருப்புக்கொடி ஏந்தி விளம்பர திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருப்பு முருகானந்தம் கூறுகையில்... திமுக ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது, ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு தலைப்பட்சமான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது,
மத்திய அரசின் திட்டம் மற்றும் அனைத்து திட்டங்களின் முதல்வர் படம் வைக்க விரும்பும் திமுகவினர் டாஸ்மாக் கடைகளில் மட்டும் முதல்வர் படம் வைத்தால் திமுகவினருக்கு கோபம் வருகிறது பாஜகவினர் மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், அதேநேரம் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர் ஊட்டிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காத நிலை தான் தமிழகத்தில் நிகழ்கிறது, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக ரீதியான ஆட்சி தமிழகத்தில் மலரும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision