பேக்கரி ஊழியர் ஒருவர் மர்ம சாவு - தாக்கிய போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் எஸ்.பி உத்தரவு

பேக்கரி ஊழியர் ஒருவர் மர்ம சாவு - தாக்கிய போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் எஸ்.பி உத்தரவு

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதால், இரவு 12 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைக்க வேண்டாம் என ராம்ஜிநகர் காவல் நிலைய போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 11 மணிக்கு மேல், கடையின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டு கடையின் பின்புறம் வியாபாரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த ராம்ஜி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர், கடையை மூடுமாறு எச்சரித்துள்ளனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்த பார்த்த போது வியாபாரம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கடை உரிமையாளருக்கும், காவலர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு பேக்கரி பணியாளரை தலைமை காவலர் கார்த்திக், கன்னத்தில் தாக்கிய காவல் நிலையம் அழைத்து சென்றனர். பேக்கரி ஊழியரை காவலர் தாக்கிய சிசிடி காட்சி சமூகவலைத்தளங்களை பரவி வருகிறது இதனைத் தொடர்ந்து பேக்கரி ஊழியரை தாக்கிய தலைமை காவலர் கார்த்திக்-யை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே கடையின் அருகே பேக்கரியில் வேலை செய்த குமார் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் இறந்து போன குமார் இந்த பேக்கரியில் பணிபுரிந்தார் என்பதும், அவர் கடைசியாக வேலை பார்த்த போது அணிந்த சட்டையுடன் நான்கு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்பதை தொடர்ந்து கடந்த 25.5.2024 அன்று குமாரின் மனைவி சத்யா ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

குமாரின் உடலை ராம்ஜி நகர் காவல் துறையினர் ஏற்கனவே அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, அவர் அணிந்திருந்த சட்டையின் விவரம் தெரியவந்தது. பவானி பேக்கரியில் வேலை பார்த்த குமார் இறந்த நிலையில் அவரை ராம்ஜி நகர் போலீசார் அடையாளம் தெரியாத விதமாக கருதி விசாரணை மேற்கொண்டு வந்த போது, குமார் பவானி பேக்கரியில் தான் வேலை செய்தார் என்பதை உறுதிப்படுத்தினார். குமார் எவ்வாறு இறந்தார்? குமார் கடைசியாக இறந்ததை யார் பார்த்தார், இறப்பிற்கான காரணம் குறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரியில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் கூடுவதும், இரவு நேரத்தில் பேக்கரியை அதிக நேரத்தில் திறந்து வைப்பதும் வழக்கமாக இருந்த நிலையில் தான் தற்போது ராம்ஜிநகர் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பேக்கரியை திறந்து இருந்ததால் காவல்துறையினர் கண்டித்து ஊழியரை கன்னத்தில் அறைந்த சம்பவ காட்சியை கடையின் உரிமையாளர் வைரல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision