ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரம் முன்னதாக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - வாக்குவாதம் - குண்டு கட்டாக தூக்கி கைது
கடந்த (10.01.2025) தேதி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது நான்காயிரம் ரூபாய் மற்றும் 700 ரூபாய் டிக்கெட் வாங்கிய பக்தர்கள் 4 மணி நேரமாக தரையில் அமர வைத்து உள்ளே ஆரியபடாள் உள்ளே அனுமதிக்காமல் காத்திருக்க வைத்தனர்.
வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்ததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞர் அணி சார்பாக கௌதம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர் அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும் அறநிலைத்துறை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
காவல்துறையினர் அனுமதி உங்களுக்கு இங்கே கிடையாது என வலியுறுத்தி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த அதையும் பொறுப்பெடுத்தாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரங்கா ரங்கா கோபுரம் முன்னதாக பாஜகவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதான வாயிலில் உள்ளே செல்லும் இடத்தில் இந்த போராட்டம் நிகழ்ந்ததால் காவல்துறையினர் பாஜகவினரை குண்டு கட்டாக தூக்கி 50 பேரை கைது செய்தனர். இப்போராட்டத்தினால் கோயில் வாயில் முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision