3 ஆண்டுகளாகியும் நிறைவடையாத பாலம் பணிகள் - ஆட்சியர் கவனிப்பாரா?

3 ஆண்டுகளாகியும் நிறைவடையாத பாலம் பணிகள் - ஆட்சியர் கவனிப்பாரா?

கல்லணை கால்வாயில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் பூதலூரில் இருந்து மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் தொண்டமான் பட்டி பொன்விலந்தான்பட்டிக்கும் இணைப்பு பாலமாக கட்டப்பட்டு வருகிறது. பல கிராமங்கள் அந்த வழியாக செல்ல வேண்டி இருக்கிறது.

ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கு மூன்று வருடத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டது பணிகளும் துவங்கப்பட்டது. மூன்று வருடங்கள் ஆகியும் பணிகள் நிறைவடையவில்லை.வெள்ளம் வருவதென அரசு அறிவித்தது மூலம் கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.அரசு அறிவித்தது என்னவென்றால் கரையோர மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு சென்று பத்திரமாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தண்ணீர் போகும்போது சென்ட்ரிங் அடித்துக் கொண்டு பணியில் இருக்கிறார்கள். இது அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா? மூன்று வருடங்களாக BWD டிபார்ட்மென்ட் இருக்குதா இல்லையா என்று தஞ்சை மாவட்டம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இதன் வாயிலாக தங்களுடைய சிரமங்களை மாவட்ட ஆட்சியரிடம் இதன் வாயிலாக தெரிவிக்கிறார்கள்.

மூன்று வருடங்களாக இந்த பணி முடியாமல் இருப்பது BWD டிபார்ட்மெண்டில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்தும், தெரியாது போல இருப்பது தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்களாகிய நாங்கள் கூறுவது என்னவென்றால் இந்த துறையை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision