அரிவாளுடன் துரத்திச் மனைவியை கொலை வெறியுடன் தாக்கும் கணவன்- சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து வந்த மனைவியை அரிவாளுடன் துரத்திச் சென்று மனைவியை கொலை வெறியுடன் தாக்கும் கணவனின் வெறிசெயல் குறித்த சிசிடிவி காட்சி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திமாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தசக்தி ஜீவா என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவருக்கும் மூன்றரை வயதில் ஒரு ஆண் மகனும் 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சக்திஜீவா தனது தாயார் வீட்டில் தங்கி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 01ம்தேதி மாலை வீரமணி கையில் அரிவாளுடன் வந்து தனது மனைவியை சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் கழுத்து , இடுப்பு, கைகளில் வெட்டுப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிந்த திருவெறும்பூர் போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்திய வீரமணியை தேடி வருகின்றனர்.
இதனிடையே வீரமணி கஞ்சா மற்றும் குடிபோதையில் தனது மகள் மீது கொலை வழக்கு தாக்குதல் நடத்தியதாகவும் , இது தொடர்பாக வீரமணியை இன்னும் போலீசார் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சக்தி ஜீவாவின் பெற்றோர் கூறுகின்றனர்.மேலும் வீரமணி மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அடிதடி கொலை முயற்சி உள்ளிட்ட ம வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீரமணி அறிவாளுடன் தன் மனைவியை துரத்தி சென்று வெட்டும் சிசிடிவி கட்சியானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






