கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - தேமுதிகவினர் அஞ்சலி

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - தேமுதிகவினர் அஞ்சலி

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் தலைமையில் அனைத்து கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட செயலாளர் டிவி கணேஷ், தொழிற்சங்கம் திருப்பதி, பொருளாளர் மில்டன் குமார், பகுதி செயலாளர் அருள்ராஜ், வட்டச் செயலாளர் செந்தில்குமார், இமானுவேல், கோபாலகிருஷ்ணன், அகஸ்டின் நிக்கோலஸ், திமுக சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் இ.எம். தர்மராஜ் , கோ.ரமேஷ், அதிமுக பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம், வட்டச் செயலாளர் நாகராஜ்,

காங்கிரஸ் பகுதி செயலாளர் எட்வின், பாரதிய ஜனதா கட்சி பாலகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொன்னுதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சேகர், தமிழக வெற்றி கழகம் கணேஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்ணன், அகில பாரத இந்து மகாசபா மணிகண்டன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும் பகுதி செயலாளர்கள் பட்ட கழக செயலாளர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூரில் புறவழிச்சாலை பகுதியில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அவரைத் தொடர்ந்து ஒன்றிய செயலாளர்கள் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி சரவணன், நகர பொருளாளர் முத்துக்குமார் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி, துணை செயலாளர் தாமரைச்செல்வன், கணேஷ், கிருஷ்ணசாமி, பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்திருந்தார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision