திருச்சியில் 20 பேர் மீது வழக்குப்பதிவு - திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் பேட்டி.

திருச்சியில் 20 பேர் மீது வழக்குப்பதிவு - திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் பேட்டி.

திருநெல்வேலியில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்ட வந்தேபாரத் அதிவேக விரைவு ரயில் சரியாக 9:40க்கு திருச்சி ஜங்ஷன் முதல் நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், ரயில்வே வணிக கோட்ட மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் ரயில் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் கலைக்குழுவினர்கள் சார்பில் ரயில் பயணத்தின் போது கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும், அதேபோல் படியில் தொங்கிக் கொண்டோ, படியில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, ரயில்வே கேட் போட்ட பிறகும் தண்டவாளங்களை கடந்து செல்வது, ரயில் வரும்போது தண்டவாங்களை கடந்து செல்வது என்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலாவது நடை மடையில் விழிப்புணர்வு நாடகம் மூலம் பயணிகளுக்கு நடித்துக் காண்பிக்கப்பட்டது. மேலும் மற்ற நடைமேடைகளில் அமர்ந்திருக்கக்கூடிய பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடங்கள் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. அதேபோல் சென்னை எக்மோரில் இருந்து இன்று காலை 5:45 மணிக்கு புறப்பட்ட சிறப்பு வந்தே பாரத் ரயிலானது திருச்சி ஜங்ஷன் நான்காவது நடைமேடைக்கு 9:50 க்கு வந்து சேர்ந்தது. ஐந்து நிமிட நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் திருநெல்வேலி நோக்கி அந்த ரயில் புறப்பட்டு சென்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோட்டை மேலாளர் அன்பழகன் கூறுகையில்..... தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3வருடம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஹீட்டர்ஸ், கேஸ் சிலிண்டர் கொண்டு செல்லக்கூடாது. நம்முடைய கோட்டத்தில் சிலிண்டர் கொண்டு சென்றது தொடர்பாக 2 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லெவல் கிராசிங் தொடர்பாக இந்த மாதம் 20 வழக்குகளும், ரயில் பெட்டியில் புகைபிடிப்பது தொடர்பாக 2வழக்கும் பதிவு செய்யபட்டுள்ளது. சிறப்பு ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் வணிக பிரிவு அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

அதேபோல் கிராமப்புறங்களை கடந்து செல்லக்கூடிய ரயில் தடங்களில் ஆடு மாடு, நாய் உள்ளிட்ட பிராணிகள் கால்நடைகள் அதிக அளவில் ரயில் பயணத்திற்கு இடையூறாக உள்ளது தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் கால்நடைகளால் சில நேரங்களில் ரயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது இதனை தடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision