ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு - திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை "பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டுள்ளது. எனவே தற்போது நாங்கள் பாஜக ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்" என்று கருத்து தெரிவித்ததற்கு
அசாம் மாநிலம் கௌகாத்தியில் பி என் எஸ் 152 மற்றும் 197 (1) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மெயின்கார்ட்கேட் BSNL அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணை தலைவர்கள் ஷேக் தாவுத், ஜான் பிரிட்டோ, சத்தியநாதன், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் அபுதாஹிர், கோட்ட தலைவர்கள் மார்க்கெட் தர்கா தளபதி பகதுர்ஷா, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைகோவில் தர்மேஷ் அகில்,
ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், சுப்ரமணியபுரம் எட்வின், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், வரகனேரி இஸ்மாயில், தில்லைநகர் கிருஷ்ணா, பஞ்சப்பூர் மணிவேல், முன்னணி அமைப்பு நிர்வாகிகள் எஸ் ஆர். ஆறுமுகம், ஷீலா செலஸ், அருள், ஆஸ்கர்,அஞ்சு, கவிதா நாச்சியார், கலியபெருமாள், பத்மநாபன்,கீர்த்தனா, அரிசி கடை டேவிட், மும்தாஜ், பாலமுருகன், ராகவேந்திரன், பக்ருதீன்,
ஹக்கீம், காமராஜ், கிளமெண்ட், செந்தில், பஜார் மொய்தீன், ரியாஸ், பாதயாத்திரை நடராஜன், ஆரிப், சுப்புராஜ், ரஃபிக், யோகநாதன், பூபதி, ஹீரா, முஹம்மது, ரவி, முருகேசன், எழில்,வளன் ரோஸ் உள்ளிட்ட நிர்வகள் திரளாக கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision