திருச்சி 28 வது வார்டு மக்களை மறந்த  மாநகராட்சி- பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி 28 வது வார்டு மக்களை மறந்த  மாநகராட்சி- பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோ-அபிஷேகபுரம், மண்டல் எண்-5, வார்டு எண்-28 ற்குட்பட்ட அண்ணாநகர் முதல் கிராஸ் மற்றும் இரண்டாவது கிராஸில் குடியிருப்பு வாசிகளின் வீட்டின் முன்பு மற்றும் பக்கவாட்டில் பாதாள சாக்கடைப் பணி எனக் கூறி சில நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் தோண்டப்பட்ட நாளிலிருந்து இதுவரை எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. மேலும் சிறுவர்கள், சிறுமிகள் இரவில் இந்த குழிக்குள் விழுந்து விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகிறது.

அண்ணாநகர் முதல் மற்றும் இரண்டாவது கிராஸ் பாதாளச் சாக்கடை இணைப்பு பணியின் போது சாலை தோண்டப்பட்டு மற்றும் பணிகள் நிறைவடைந்தவுடன் குழிகள் மூடப்பட்டது. ஆனால் சாலைகள் (அண்ணாநகர் 1 மற்றும் 2 வது கிராஸ்) குண்டும், குழியுமாகவே உள்ளதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

காமராஜ் நகருக்குட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி மூடியில்லாமலேயே பல மாதங்களாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சரியான பராமரிப்பு இல்லாதலால் குடிநீர் தொட்டியில் பாசான், புழுக்கள் நிறைந்து துர்நாற்றம் வீசக்கூடிய அவலநிலையில் உள்ளது. இதனால் அந்த குடிநீர்த் தொட்டியைப் பயன்படுத்தும் மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மேற்கண்ட கோரிக்கைகளை சரிசெய்து கொடுத்திட  திருச்சி மாநகராட்சி மண்டல் எண்.5 கோ-அபிஷேபுர மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் மற்றும் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn