தொடர்பு திறன் - மேம்படுத்திக்கொள்வோமா?

தொடர்பு திறன் - மேம்படுத்திக்கொள்வோமா?

எந்த காலகட்டமாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும் பல்வேறு திறன்களுடன் முக்கியமாக தேவைப்பட கூடிய திறன் தொடர்பு திறன்கள் என கூறக்கூடிய communication skills தான், தொடர்பு திறன்கள் என்றதும் பேசுவது தானே என எளிதில் கடந்து விடாமல் அதற்குள் இருக்கும் முக்கியமான சில விதிகளை கவனத்தில் கொள்வது அவசியம்.

ஏனெனில் இந்த திறனை பொறுத்தவரை பேசுவதில் ஆரம்பித்து, நம்முடைய யோசனைகள், கட்டளைகள், ஒரு பொருளை விற்பனை செய்தல் என ஒவ்வொரு விஷயத்திற்கும் மிக அடிப்படையாக இருக்கும். இப்படியான திறனை வளர்த்து கொள்ள தேவையான அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

தொடர்பு திறனில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது கேட்கும் திறன், நாம் மற்றவர்களிடம் பேசுவதற்கு முன்பு அவர்கள் சொல்வதை கேளுங்கள், அதிகமாக பேசுவதை விட அதிகமாக கேட்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு விஷயத்திற்கும் சரியான விளக்கங்களை கேளுங்கள், தெளிவானவற்றை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

கவனமாக இருக்க வேண்டும், ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டும் பேசுங்கள், மின்னஞ்சலில் பதிலளித்து கொண்டு இருக்கும் போது தொலைபேசியில் வேறு யாருடனும் பேசிக்கொண்டு இருக்காதீர்கள். இதனால் கவனம் சிதறுவதுடன், சரியான முறையில் நீங்கள் கூற வரும் விஷயங்களை கூற முடியாது. தொடர்ந்து எப்படி பேசுவது என்ற தெளிவுடன் இருப்பதும் முக்கியம்.

நீங்கள் சாதாரணமாக உங்களின் நண்பரிடம் பேசுவதை போன்று உங்கள் முதலாளியுடனும் பேசுவது சரியான முறை ஆகாது. முக்கியமாக நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவை அனுப்பும் பொது உங்களுடைய நண்பராக இருந்தால் சுருக்கமாக அனுப்பலாம் ஆனால் அதே போன்று உங்கள் உயரதிகாரிகளுக்கு அனுப்புவது தவறு. தொடர்பு திறனில் முக்கியமான மற்றொரு விஷயம் மற்றவர்களுடன் பேசுகையில் பேசுவதை போன்று உடல்மொழியும் மிக முக்கியம்.

கைகளை கட்டிக்கொண்டோ கவனத்தை வேறு இடத்தில வைத்து கொண்டோ பேச கூடாது. கண்களை நேருக்கு நேர் பார்த்து உறுதியான குரலில் தெளிவாக பேசிட வேண்டும். முக்கியமான, தேவையான கருத்துகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள், என்னதான் நீங்கள் நினைவாற்றலுடன் இருந்தாலும், ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் முன் குறிப்பெடுத்து கொள்ளுங்கள்.

இதன்மூலம் நீங்கள் கூற வரும் எந்த விஷயத்தையும் தவற விட மாட்டீர்கள். மற்றும் தெளிவுடன் கூறுவீர்கள். இதனை தவிர்த்து, அதிகமாக புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்தாமல் கால் செய்து பேசலாம், அனைவரையும் சமமாக பாவித்து பேசுவது, எதனை பேசுவது என்றாலும் தெளிவுடனும், யோசித்தும் பேசுதல் மற்றும் நேர்மறையாக, சிரிப்புடன் பேசுவது போன்றவை உங்களின் தொடர்பு திறனை மேம்படுத்த உதவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision