சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா

சமூக நலம்  மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி  தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பாலசமுத்திரம் பாலமுருகன் திருமண மண்டபத்தில் (26. 02.2025) அன்று சிறப்பாக நடைபெற்றது அவ்விழாவில் உயர்திரு முசிறி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

 மேலும் இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலையிட்டு மஞ்சள் குங்குமம் வளையல் ஆகியவற்றை அணிவித்தனர் இவ்விழாவில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு பூ பழம் ஜாக்கெட் துணி வளையல் மஞ்சள் குங்குமம் பேரிச்சம்பழம்

 உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 5 வகை கலவை சாதத்துடன் மத்திய உணவு அளிக்கப்பட்டது இவ்விழா தொட்டியம் வட்டாரத்தின் சார்பாக தொட்டியம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி வசந்தி ஏற்பாடு செய்திருந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision