திருச்சியில் தொடரும் கனமழை - நீர் வடியாமல் சம்பா சாகுபடி பாதிப்பு
திருச்சி மாவட்டம் முழுவதும் மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மண்ணச்சநல்லூரின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீர்நிலைகள், வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வடியாமல் வயல்களில் புகுந்து மூழ்கியுள்ளது. மேலும் விளைந்த நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து உள்ளது.
சம்பா சாகுபடிக்கு இதுவரை 35 முதல் 40 ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து உள்ளோம் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதால் விவசாய நிலங்களில் நீர் புகுந்து பயிர் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision