திருச்சி பிரியாணி கடை லிப்டில் சிக்கிய குக் வித் கோமாளி
திருச்சி தென்னூர் மெயின் ரோட்டில் பிரியாணி ஓட்டல் திறப்பு விழாவிற்கு குக் வித் கோமாளி நடிகர் புகழ் வந்திருந்தார். மூன்றாவது மாடியில் அமைந்திருந்த ஹோட்டலை திறந்து வைத்தார். பின்னர் தரை தளத்தில் இருந்த ஜுவல்லரிக்கு செல்ல புகழ் முயன்றார். அப்போது மாடி படிகட்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் லிப்ட் மூலமாக புகழை அழைத்து செல்ல விழா ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்து அவரை லிப்டிற்குள் அனுப்பி வைத்தனர்.
புகழுடன் ஒரிருவர் மட்டுமே லிப்டில் செல்ல போட்டோகிராபர்கள், பாக்சர்கள் உள்ளிட்ட பலர் மாடி படி வழியாக தரை தளத்தில் உள்ள ஜுவல்லரிக்கு விரைந்து சென்றனர். தரைதளத்தில் அவர் சென்று காத்திருந்த போதும் லிப்ட் கீழே வரவில்லை. 10 நிமிடத்திற்கும் மேலாகியும் லிப்ட் வராததால் பதட்டம் கீழே காத்திருந்தவர்களுக்கு பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு வழியாக லிப்ட் கீழே வந்திறங்கிய போது அதிலிருந்து வேர்க்க விறுவிறுக்க புகழ் வெளியே வந்தார்.
என்ன ஆச்சு என்று அவரிடம் கேட்ட போது 10 நிமிடத்திற்கும் மேலாக லிப்ட் வேலை செய்யாததால் பாதி வழியிலேயே நின்று போனது. பிறகு சரியான பிறகு திரும்ப லிப்ட் இயக்கப்பட்டு வந்ததாக புகழ் தொிவித்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவிட் தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏராளமான கூட்டம் அங்கே கூடி இருந்தது . அவர் காரில் ஏறும் பொழுது அவரை கூட்டமாக புகழை சூழ்ந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn