கூட்டுறவு சங்க எழுத்தாளர் தற்கொலை- உடலை வாங்க உறவினர்கள் மறுத்து தர்ணா போராட்டம்

Jul 5, 2025 - 11:46
Jul 5, 2025 - 11:52
 0  413
கூட்டுறவு சங்க எழுத்தாளர் தற்கொலை- உடலை வாங்க உறவினர்கள் மறுத்து  தர்ணா போராட்டம்

கூட்டுறவு சங்க எழுத்தாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் அவரிடம் இருந்த கடிதம் போலீசாரால்  கைப்பற்றப்பட்டது. கடிதத்தில்  தனது சாவிற்கு காரணம் நகை மதிப்பீட்டாளர் கிருத்திகாவும், வரவேற்பாளர் ராமதாஸ் தான் காரணம் என வேங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முதுநிலை எழுத்தாளர் சாமிநாதன் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை தோகூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 

சாமிநாதன் ஆகிய நான் எழுதுவது நடராஜபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து வருகிறேன் 30.6.2025 அன்று நகை திருப்புவதற்காக புவனேஸ்வரி என்பவர் வங்கி வந்தர் அவருடைய நகை திருப்பி கொடுக்க எடுத்தபோது நகை பொட்டலத்தில் சிப் இருந்தது அதில் ஒரு நெக்லஸ் மட்டும் இருந்தது சில நகை

மதிப்பீட்டாளரிடம் கேட்டபோது நான் சீல் வைக்கும்போது சரியாக இருந்தது என்று அதில் சீல் அடிக்கும் போது எடுத்த சில பேர் சீல் வைத்த பொட்டலம் நகை முறையாக இல்லாதநிலையில் நகை காணாமல் போனதற்காக என் மீது பழி சுமத்தினார் நான் இறப்பதற்கு நகை மதிப்பீட்டாளரும் மதிப்பீட்டாளர் கிருத்திகாவும் உர விற்பனையாளர் ராமதாஸும் தான் காரணம்

மேலும் நான் குடியிருக்கும் வீடு என் மனைவி தாமரைச்செல்விக்கு தான் தர வேண்டும் எனக்கு என் தம்பி பிள்ளைகள் யாரும் கொள்ளி வைக்க கூடாது என்றும் தனது மனைவி கொள்ளி வைக்க வேண்டும் இப்படிக்கு சாமிநாதன். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அவரது உறவினர்கள் இவர்

 தற்கொலைக்கு காரணமான மேலும் நான்கு பேரை கைது செய்ய வேண்டும் என்றும் அவரது இறப்பிற்கு நீதி கேட்டும், உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் கடந்த நான்கு மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0