சாலையோர மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய டாஸ் அறக்கட்டளை

சாலையோர மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய டாஸ் அறக்கட்டளை

கொரானா ஊரடங்கால் சாலையோரத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏழை மக்களுக்கும் டாஸ் அறக்கட்டளை மூலம் 200 மேற்பட்ட நபர்களுக்கு உணவளித்து உதவியுள்ளனர்.

தென்னூர், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், காந்தி சந்தை, ஈ.பி சாலை ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில் தில்லைநகர் பகுதிகளிலும் நேற்றைய தினம் மதிய உணவு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து டாஸ் அறக்கட்டளை காசிநாதன் கூறுகையில்... டாஸ் அறக்கட்டளை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தென்னூரில் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக டாஸ் சேவை மையமாக செயல்பட்டு வந்தது கடந்த இரண்டு ஆண்டுகளாக டாஸ் அறக்கட்டளை என்ற பெயரில் மக்கள் சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றோம். இந்த சேவை அமைப்பில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து டாஸ் அறக்கட்டளை என்ற பெயரில் மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளோம்.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாலையோர மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்க வேண்டுமென்று நேற்றைய தினம் அரசிடம் ஒப்புதல் பெற்று 10 நபர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு அளித்து உள்ளோம். மேலும் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவும், தேவையான தண்ணீர் பாட்டில்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd