தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் வருடந்தோறும் ஆடி 28-யை முன்னிட்டு குரும்பர் இனமக்களின் பொது தெய்வங்களான அருள்மிகு சென்னப்பசுவாமி, மகாலெட்சுமி அம்மாள், பீரேஷ்வரசுவாமி (சிவபெருமாள்), அகோர வீரபத்திரசுவாமி, ஏழு கன்னிமார்கள், பாப்பாத்தி அம்மன் மற்றும் காவேரியம்மன் அகிய தெய்வங்களை வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஆலய பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடும் நடைபெற்றது.

இதில் நாட்டாண்மை எம்.பி.எஸ்.நாகராஜன் , ஊர் முக்கியஸ்தர்கள் முருகன், ரெங்கசாமி, பூசாரிகள் சுப்பிரமணி, கோபி, செல்வம், முத்துக்குமார், கதிர்வேல், செந்தில், தாதகவுண்டர் உள்ளிட்டோர் தலைமையில் விழா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் ஊத்துப்பட்டி குரும்பகவுண்டர் சேர்வை ஆட்டம்,  ஆகியவை நடைபெற்றது. நேர்த்திக்கடன் வைத்திருந்த பெண்களுக்கு சாட்டையடி வழிபாடும் நடைபெற்றன. பின்னர் இறைவனுக்கு பொங்கலிட்டு படையல், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று மாலை கரகம் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் குரும்பர் இன மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO