திருச்சியில் கோவில் திருவிழாவிற்கு பிளக்ஸ் வைப்பதில் இரு தரப்பினர் இடையே தகராறு - சாலை மறியல்

திருச்சியில் கோவில் திருவிழாவிற்கு பிளக்ஸ் வைப்பதில் இரு தரப்பினர் இடையே தகராறு - சாலை மறியல்

திருச்சி தென்னூர் மந்தையில் உக்கிரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்காக ஆண்டுதோறும் பிளக்ஸ் போர்ட் 4நாட்களுக்கு முன்னதாக வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்பாக பிளக்ஸ் வைத்ததால் அங்க இருக்கக்கூடிய கடைகள் மறைப்பதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி அதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்து காவல் உதவி ஆணையர் தங்கபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை இதைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று காலை 8மணி அளவில் தில்லைநகர் காவல்துறையினர் ,மாநகராட்சி அலுவலர் உதவியுடன் அகற்றியதாக தெரிகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகிகள், இந்து அமைப்பினர் தென்னூர் அரசமரம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் திருச்சி மாநகர் சட்டம் ஒழுங்கு துணை ஆனையர் சிபின் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார். இதைத் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில் அதே சிறிது தூரம் தள்ளி பேனரை வைக்க காவல்துறையினர் அனுமதித்திருப்பதாக தெரிகிறது.,

சாலை மறியல் நடைபெறும் இடம் திருச்சியில் மையப் பகுதியான தில்லைநகர், தென்னூர் இணைக்கக்கூடிய பகுதியாக இருப்பதாலும் அரசு பொது மருத்துவமனைக்கும். காந்தி மார்க்கெட்டுக்கும் செல்லக்கூடிய பாதையாக அமைந்ததால் அலுவலகத்திற்கு செல்வோர் மற்றும் பேருந்துகள் நீண்ட வரிசையில் சாலையில் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision