திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு தீர்வு. திருவெறும்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு தீர்வு. திருவெறும்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி

திருச்சி திருவறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று திருவறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கலின் போது மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன், குதிரை ஆட்டம் , பொய்க்கால் ஆட்டம் , ஆகியவற்றுடன் தொண்டர்கள் புடைசூழ திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொமுச அலுவலகத்தில் இருந்து திருச்சி தஞ்சை சாலையில் திருவெறும்பூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்தார்.


இதனைத் தொடர்ந்து திருவறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகனடடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் எம்எல்ஏ இருக்கன் சேகரன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.


பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய மகேஷ் பொய்யாமொழி..... இந்தத் தேர்தல் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதை மக்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  மக்கள் வரவேற்பு எழுச்சியாக உள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றுவது, சர்வீஸ் சாலை பிரச்சனை, புதிதாக இணைக்கப்பட்ட 5 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம், ஆகிய இந்த மூன்று பிரச்சினைகள் குறித்து முதலில் சரி செய்வோம் என உறுதி அளிக்கிறோம். நான் தொகுதி பக்கம் வருகிறாயா? இல்லையா? என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்னுடைய பணிகள் மக்களிடத்தில் பேசும் என்றார்.


வேட்புமனு ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I