தனியார் ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துனர் - ஏஐடியு கண்டனம்..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி)யில் ஓட்டுனர் நடத்துனர் ஒப்பந்த முறையில் 365 நாட்களுக்கு மட்டும் பணிபுரிந்திட தனியார் நிறுவனங்களிடமிருந்து (18.07.24) அன்று திறக்கும் வகையில் ஒப்பந்தப்பள்ளி எண் :2647/துமே/ பொருட்கள்/2024 மேலாண் இயக்குனர் அவர்களால் கோரப்பட்டுள்ளது.
நிரந்தர தன்மையுள்ள தொழிலில் ஒப்பந்த முறை கூடாது என்றும். ஒப்பந்த தொழிலாளர் ஒழுங்குபடுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டவை நடைமுறையில் உள்ளன. மேலும் 1947-ம் ஆண்டு தொழில் தாவா சட்டத்தின்படி ஏற்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தங்களிலும் ஓராண்டில் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
இந்நிலையில் ஒப்பந்த முறை மூலம் ஓட்டுநர் நடத்துனர் பணி நியமனம் செய்தால் ஒப்பந்ததாரர்கள் லாபம் பெறுவதற்கும். ஊழல் நடைபெறுவதற்கும் வாய்ப்பளிக்கும் சூழ்நிலை உருவாகும்.. தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படும். எனவே, ஒப்பந்த முறை மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பகங்களில் பதிவு செய்து நீண்ட நாட்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களாகிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணிக்கு அமர்த்திட வேண்டும்.
நேரடி நியமனம் மூலம் பணிக்கு வருபவர்கள் வேலைவாய்ப்பு நம்பகத்தன்மை உள்ளது என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்வதற்கு உரிய சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும். தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் ஓட்டுனர் நடத்துனரை சந்தையில் விற்கும் ஒரு பண்டமாக கருதி வழங்கிடக் கோரும் அறிவிப்பை கைவிட வேண்டும் என தமிழக அரசையும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தையும் ஏஐடியுசி சார்வில் கேட்டுக்கொள்கிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision