மழைநீர் பாதை ஆக்கிரமிப்பு- பராமரிப்பு இல்லாததால் திருச்சி உறையூர் பகுதிவாசிகள் தத்தளிப்பு 

மழைநீர் பாதை ஆக்கிரமிப்பு- பராமரிப்பு இல்லாததால் திருச்சி உறையூர் பகுதிவாசிகள் தத்தளிப்பு 

திருச்சி உறையூர் பாத்திமா நகர் பகுதியில் உய்யகொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் உள்ளது .இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. மூன்று நாட்கள் ஆகியும் மழைநீர் வரியாமல் நிற்பதால் மக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கூட சிரமத்தை சந்திக்கின்றனர். 

இது குறித்து தொடர்ந்து  அப்பகுதி மக்கள் குறிப்பிடுவது என்னவென்றால் .. இப்பகுதியில் முறையாக வடிகால் வாய்க்கால்களை சீரமைக்காமலும் ஆக்கிரமிப்பாலும் மழைநீர் வீடுகளை சூழ்ந்து விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நீர் வரக்கூடிய பாதையில் உள்ள சிறிய வாய்க்கால் மதகுகள் பராமரிக்கப்படாததால் இப்பகுதியில் மழைநீர் புகுந்ததாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

மூன்று நாட்களுக்கு பிறகு இன்று தான் அப்குதியில் நிற்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதனால் உடனடியாக அடுத்தடுத்து மழை பெய்தால் இதுபோன்ற அவதிகளை மக்கள் சந்திக்காமல் இருக்க உடனடியாக நிரந்தர தீர்வை நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn