ஆங்கிலம் எளிமையானதே அலிஃபியா சாரா

ஆங்கிலம் எளிமையானதே அலிஃபியா சாரா

பள்ளி, கல்லூரி, நேர்முகத்தேர்வு, பணிபுரியும் இடம் என பலவற்றிலும் ஆங்கில மொழியின் தேவை இருக்கிறது. அதே சமயம் கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கும், எழுதுவதற்கும் சிரமப்படுபவர்கள் பலர் உள்ளனர். இத்தகைய தயக்கத்தையும், சிரமத்தையும் போக்கி, ஆங்கிலத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார் திருச்சியில் சேர்ந்த அலிஃபியா சாரா.

படிப்பு முடிந்தவுடன், பிறருக்கு பயன்படும் வகையிலான தொழிலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆங்கிலம் உலகம் அனைத்திற்கும் பொதுவான மொழி. இதன் மூலம் எளிதாக தகவல் தொடர்பை மேம்படுத்தலாம். இதை நான் உணர்ந்தபோதுதான், ஆங்கிலத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பயிற்சி அளித்து வருகிறேன்.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும், ஆங்கிலம் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால், திறமை இருந்தும் தாழ்வு மனப்பான்மையால் தங்களை குறுகிய வட்டத்துக்குள் அடைத்துக்கொள்ளும் மாணவர்கள் பலர் இருக்கின்றனர். கல்லூரியில் ஆங்கிலம் பிரதானமாக இருக்கும்போது, பெரும்பாலான மாணவர்கள் திணறுகின்றனர். அதன்பிறகு வேலை, உயர்கல்வி, வெளிநாட்டுப் பயணம் என அனைத்தும் ஆங்கில மயமாக உள்ளது. இவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தின் அடிப்படையைக் கற்றால், அதை எங்கும் எளிதாகப் பயன்படுத்தலாம். ஆனால், ஆங்கில வழியில் படிக்கும் பல மாணவர்களுக்கும் இந்த அடிப்படை சரியாகத் தெரிவதில்லை. இதன் விளைவாக, மற்றவர்களுடன் உரையாடும்போது, தவறாகப் பேசி விடுவோமோ? பிறர் நம்மைக் கேலி செய்து விடுவார்களோ? என்று பயப்படுகின்றனர். இதன் காரணமாகவே, ஆங்கிலத்தைப் புறக்கணித்து, பிறருடன் பரிமாறும் தகவலையும் தாய் மொழியிலேயே கூற விரும்புகின்றனர். தாய்மொழியில் பேசும்போது தவறு ஏற்பட்டால் அதை நினைத்து கவலைப்படுவதில்லை. அதுவே, ஆங்கிலத்தில் தவறு செய்தால், பெரிய குற்றம் செய்ததாக நினைக்கின்றனர். எதையும் தைரியமாகப் பேசும்போது, அதில் இருக்கும் தவறுகளை எளிதில் சரி செய்யலாம் என்று உணர்ந்தால் பயம் ஏற்படாது.

மாணவர்களுக்கு ஆங்கிலத்தைப் பாடமாகக் கற்பிப்பதில்லை. வார்த்தைகள், அதற்கான அர்த்தங்கள், எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற உத்திகளைக் கற்பிக்கிறோம். அவர்களுக்குப் பயிற்சித் தேர்வு நடத்துகிறோம். அதில், கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் தாங்களாகவே, முயற்சி செய்து, சரியான வாக்கியத்தை அமைத்து, அதைச் சொல்லிக் காட்டவும் சொல்கிறோம். தவறு இருந்தால், அதை உடனடியாகத் திருத்துவதற்கு பயிற்சி அளிக்கிறோம். இதனால், மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிறக்கிறது.

https://www.instagram.com/learn_with_sarah?igsh=MWkxNWNiOHA3OHNvNQ முதல் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்பிப்பதால், இதில் படிக்கும் மாணவர்கள் பலரும் உயர் வகுப்பில் ஆங்கில வாயிலாகப் படிக்கும் பாடத்தை நன்றாகப் புரிந்து படிக்க முடிகிறது. இதன் மூலம், அதிக மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், கல்லூரி, வேலையில் ஆய்வுக் கட்டுரைகளை எளிதில் சமர்ப்பிக்கவும், சந்தேகங்களுக்கு ஆங்கிலத்திலேயே எளிதாக விளக்கம் அளிக்கவும் முடிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலத்தை எளிதாகக் கற்க சிறந்த வழி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு நாம் பேசுவதுதான். சொல்ல அல்லது எழுத விரும்பும் எந்தக் கருத்தையும் முதலில் மனத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்தக் கருத்தைச் சொற்றொடர்கள் மூலம் பேசவோ, எழுதவோ செய்யலாம். இதற்குப் போதுமான சொல்வளம், கொஞ்சம் இலக்கணத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று வார்த்தைகள் கொண்ட எளிய வாக்கியங்களில் தொடங்கி, பின்னர் அதை மெருகேற்றி, பொருத்தமான வார்த்தைகளை உபயோகித்து ஆங்கிலத்தில் பேசும் கலையை வளர்த்துக்கொள்ளலாம். Vocabulary எனப்படும் ஆங்கில சொல்வளத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டுவருவது இதற் கு உதவும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision