பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு  கண்  பரிசோதனை முகாம்

அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனைமுகாம் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி அவர்கள் இன்று (02-05-2025) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மற்றும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண் மருத்துவ பரிசோதனை முகாமில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பரிசோதகர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் என 205 நபர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். 

பார்வை குறைபாடுகள் (REFRACTIVE ERROR), முதியோர் கண்குறைபாடுகள் (ARMD), கண்புரை பரிசோதனை (CATARACT), குழந்தைகள் கண் குறைபாடு (PEDIATRIC VISION PROBLEMS), சர்க்கரை கண் நோய் (RETINOPATHY), கண் நீர் அழுத்தம் (GLAUCOMA) போன்ற குறைபாடுகளை கண்டறியும் உபகரணங்களுடன் முகாமில் சிறப்பு பரிசோதனை கட்டணமின்றி வழங்கப்பட்டது. 

இம்முகாமில் பொது மேலாளர் என்.முத்துகுமாரசுவாமி, துணை மேலாளர், P.தங்கபாண்டியன், உதவி பொறியாளர் G.ராஜ்மோகன், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பரிசோதகர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கண் மருத்துவர்கள் ஜீவா, அபூர்னா கண் பரிசோதகர்கள் திரு.சிவா, பூங்குன்றன், மணிகண்டன், நவீன், தனூஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision