ரூ. 3 ஆயிரம் ஏமாற்றிய போலி மாந்திரிகவாதி திருச்சியில் கைது

ரூ. 3 ஆயிரம் ஏமாற்றிய போலி மாந்திரிகவாதி திருச்சியில் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இன்று (03.02.2025) காலை 11:00 மணிக்கு அமர்ந்திருந்த சதீஸ்பாபு (31), த/பெ.மாணிக்கம் மாரியம்மன் கோவில் தெரு, மலைக்கோவில், திருவெறும்பூர், திருச்சி என்பவரிடம் ரகு (45) நடுக்குப்பம், 4 வது தெரு. திருவல்லிக்கேணி, சென்னை (மலையாளி) என்பவர் எனது சொந்த மாநிலம் கேரளா எனவும்,

ஜோசியம் மற்றும் மாந்திரிகம் பூஜை செய்வதில் கைதேர்ந்தவர் எனவும். உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் எனவும், வரும் பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலராக்குகிறேன் எனவும் கூறி pappalyvishnumaya என்ற யூடியூப் சேனலுக்கு சென்று மாந்திரீகம் சம்மந்தமான நிறைய வீடியோக்களை காண்பித்து சதீஸ்பாபுவிடம் முன் பணமாக ரூ.3000/- பணத்தை பெற்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாந்திரீகம் செய்துவிட்டு 1 மணி நேரத்தில் வருகிறேன் என கூறி சென்றுள்ளார்.

மேலும், 1 மணி நேரம் ஆகியும் திரும்பி வராததினால் சதீஸ்பாபு மலைக்கோவில் பகுதியில் சென்று தேடிய போது, அங்கு மற்றொருவரிடம் அதேபோல் கூறி பணம் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது. சதீஸ்பாபு சென்று ஏன் ஏமாற்றி பண மோசடி செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டபோது நான் கேரளாவை சேர்ந்து மாந்திரீகன் எனவும், உன்னை மாந்திரீகம் செய்து கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இது சம்மந்தமாக சதீஸ்பாபு என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண். 8939146100-ற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததன் பேரில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், உத்தரவின்படி திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து மேற்படி மாந்திரீகம் செய்த ரகுவை உடனடியாக (03.02.2025) கைது செய்து. அவர் மீது . 44/25, U/s 316(2), 318(4), 354, 351(2) BNS வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision