தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) - இணைய விண்ணப்ப பதிவு 27 ஆம் தேதி வரை நடைபெறும்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) - இணைய வலி விண்ணப்ப பதிவு 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது -கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு .
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பதிவு 07.05.2025 (புதன் கிழமை) முதல் 27.05.2025 (செவ்வாய் கிழமை) வரை இக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும். எனவே கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும்
மாணவ/மாணவிகள் இக்கல்லூரியின் e-சேவை மையத்தில் உள்ள சேர்க்கை உதவி (AFC) மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என இக்கல்லூரி முதல்வர் முனைவர். க. அங்கம்மாள் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கல்லூரியில் உதவி மையம் (Help Desk) செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision