பணி நீக்கம் செய்யப்பட்டவர் போலீஸ் உடையில் வந்து பெட்ரோல் நிரப்பி அடாவடி - கைது

பணி நீக்கம் செய்யப்பட்டவர் போலீஸ் உடையில் வந்து பெட்ரோல் நிரப்பி அடாவடி - கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கேசியராக அதே பகுதியை சேர்ந்த சரவணன் (35) வேலை பார்த்து வருகிறார். இவருடன் உதவியாளராக கனகநாதன் என்பவரும் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பெட்ரோல் பங்கில் இருவரும் பணியில் இருந்த போது போலீஸ் சீருடையில் வந்த டிப்டாப் ஆசாமி தனது இருசக்கர வாகனத்திற்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி உள்ளார். பின்னர் கனகநாதன் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது. போலீசிடமே பணம் கேட்கிறாயா எனக்கூறி அருகில் இருந்த கம்பியை எடுத்துக்கொண்டு கனகநாதன் மற்றும் சரவணன் இருவரையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த ஆசாமி அணிந்திருந்த போலீஸ் சீருடை அழுக்காகவும், அவரது இடது பக்க கண்ணுக்கு கீழே அடிபட்டு கண்ணிய காயம் இருந்ததால் சந்தேகமடைந்த இருவரும் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தொட்டியம் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸ் சீருடையில் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சேலம் சங்கர் நகரை சேர்ந்த மாதவன் மகன் மணிகண்டன் (45) என்பதும், இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து மாதவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision