முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை திருவிழா கோலாகலம்

திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம்,முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் (1-03 -2025) முதல் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.(3.3.2025) இன்று பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை திருவிழாவாக கொண்டாடினர்.குழந்தைகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை உணர்ந்த பொதுமக்கள் அணிதிரண்டுவந்துதாய் மொழி கல்வி காக்க தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தனர் - இன்று( 3- 03.2025 ) ஆண் 14பெண் 13 மொத்தம் 27 மாணவர்கள் சேர்ந்து அசத்தினர்
பேரக்குழந்தைகளை அழைத்து வந்த பாட்டிகள் , புத்தாடை அணிந்து பள்ளிக்கு வருகை புரிந்த பெற்றோர்கள், பக்கத்து வீட்டுக் குழந்தையை பள்ளியில் சேர்க்க பெற்றோருடன் அழைத்து வந்த பள்ளி மாணவர்கள் என இன்று பள்ளி வளாகம் விழாக்கோலம் பூண்டு பெற்றோர்கள் கோலாகலமாக கொண்டாடி சென்றனர்.பள்ளி ஆசிரியர்கள் வந்த அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுபொருட்களை பரிசாக வழங்கி வரவேற்றன்ர்
வட்டாராக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி இராஜசேகர் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து - கொண்டு வாழ்த்தினர். பிரபாவதி பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்,மு.சதீஷ், .க.மொ.கணேசன் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஸ்ரீரங்கம் செஞ்சிலுவை சங்க ஆணையர் ரோட்டேரியன் சீனிவாசன் பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் நாட்காட்டி வழங்கினார் - நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் சகாயமேரி சந்திரா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision