ஐஸ்வர்யா மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ அரட்டை அரங்கம்

Oct 30, 2023 - 09:47
Oct 30, 2023 - 09:57
 331
ஐஸ்வர்யா மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ அரட்டை அரங்கம்

திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ அரட்டை அரங்கம் ஸ்ரீரங்கம் ஜி எஸ் ஆர் கே காந்திமதி சீனிவாச மஹாலில் நடைபெற்றது.

இதில் பிரபல சிறப்பு மருத்துவர்கள் Dr. ராஜேஷ் ராஜேந்திரன்.MS.,MCh.,FICS சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்), Dr. மகாலட்சுமி.MBBS.,DTCD.( நுரையீரல் நிபுணர்). Dr. பிரகாஷ்.MD.,DM ( சிறுநீரகவியல் நிபுணர்) Dr. சதீஷ்குமார்.MD (பொது மருத்துவர்) Dr. ராஜகோபால் .MBBS ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொதுமக்களின் மருத்துவம் குறித்த சந்தேகங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு பங்கு பெற்று பயனடைந்தனர். பொதுமக்களின் மருத்துவம் குறித்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பதில் அளித்தனர்.

மேலும் நோய்களிலிருந்து எப்படி விடுபடுவது? நோய் வருமுன் தடுப்பது எப்படி? என்பது குறித்து ஆலோசனைகளை சிறப்பு மருத்துவர்கள் அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision