லேப்டாப்பில் தங்க தகடு - 3 பேர் கைது

லேப்டாப்பில் தங்க தகடு - 3 பேர் கைது

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 3 ஆண் பயணிகள் தங்களது லேப்டாப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க தகடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தங்க கட்டி மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம் அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 26 லட்சம் ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision