தங்கம் வென்ற திருச்சி மாணவி உலக அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வு
திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி சு.அ.யாழினி கடந்த 22 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கோவாவில், தமிழ்நாடு யூத் ரூரல் கேம்ஸ் அண்டு ஸ்போட்ஸ் அசோசியேஷன் ( YRGSAT ) சார்பில் நடைபெற்ற, சிலம்பம் போட்டியில் பல்வேறு கட்ட போட்டிகளை சிறப்பாக எதிர்கொண்டு தங்கப்பதக்கம் வென்று உலக அளவில் நேபாளத்தில் நடைபெறும் சிலம்பம் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற இப்போட்டியில் ஆந்திரா, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இருபால் வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அணி சார்பாக பலர் பங்கேற்றனர். மேலும் செல்வி யாழினி திருச்சி மாவட்டத்தில் இளம் கவிஞராகவும், இளம் பேச்சாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவரை பள்ளியின் தாளாளர் வி. கோபிநாதன், பள்ளியின் செயலர் லட்சுமிபிரபா கோபிநாதன், பள்ளியின் முதல்வர் தயானந்தன் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டி மென்மேலும் வளர வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn