திருச்சி காவேரி மகளிர் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி சமுகப்பணித் துறை சார்பில் கிராமியமுகாம் விடியல்

திருச்சி காவேரி மகளிர் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி சமுகப்பணித் துறை சார்பில் கிராமியமுகாம்  விடியல்

திருச்சி காவேரி மகளிர் கல்லூரிமுதுகலை மற்றும் ஆராய்ச்சி சமூகப்பணி துறை சார்பில் கிராமிவிடியல முகாம் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி முதல் 12ம் தேதி வரை குன்னத்தூரில் நடைபெற்றது.தொடக்க நிகழ்வில் சமூகப்பணி துறை தலைவர் மெட்டில்டா புவனேஸ்வரி தொடக்கவுரை வழங்கியுள்ளார்.ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்தலைமையுரை வழங்கியுள்ளார்.

 வாழ்த்துரையை புலத்தலைவர் முன்னாள் மாணவிகள் தொடர்பு காவேரி மகளிர் கல்லூரி கனகா , மனிதவள மேலாளர் லாரன்ஸ்ரனே பிரேக் லைனிங் திருச்சி வழங்கியுள்ளனர்.தொடக்க விழாவில் கல்லூரி சேர்ந்த மாணவிகள் முகாமின் மூலம் சமூகப் பிரச்சினைகள் அதன் விளைவுகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

முகாமின் முதல் நாளில் கிரியா பள்ளியில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அகிலா உளவியல் நிபுணர் மற்றும் பிரபு டயாபட்டிக் ஸ்பெஷலிஸ்ட் பெண்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கு உணவு மற்றும் ஆரோக்கியம் பற்றி எடுத்துரைத்தார்.

 மேலும் துரித உணவுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார் அதனைத் தொடர்ந்து ஆஷிஷ் பிரைனார்ட் துணை ஒருங்கிணைப்பாளர் ஹோப் ஆப் தி ஹோப்பிளஸ் திருச்சி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் கைபேசினால் நாள் வரும் விளைவுகள் பற்றி விளக்கினார்.அதனைத் தொடர்ந்து உதவியாளர் சத்யபிரகாஷ் "கை கழுவுதல் முறைகள்" பற்றி எடுத்துரைத்தார் பின்னர்சுகாதார கணக்கெடுப்பு குன்றத்தூரில் நடைபெற்றது.

இரண்டாம் நாள் :

குன்னத்தூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமிற்கு வாசன் ஐ கேர் மருத்துவர் லியோ மற்றும் அவரது குழுவினர் மக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

மனநல ஆலோசகர் முனைவர் கீதா கல்வி மற்றும் மன நல ஆரோக்கியம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 மூன்றாம் நாள் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பெண்கள் பயன்பெறும் வகையில் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

நான்காம் நாள் பிடாரம்பட்டி காலனியில் சுகாதார கணக்கீடு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்களுக்கு இயற்கை காட்சி எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது பின்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அங்குள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டது.

கோலார் பட்டியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் வித்யா மற்றும் ராபின்சன் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர.

ஐந்தாம் நாள் குன்னத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளை உடல் நிறை குறியீடு எடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து டாக்டர் பிரபாகரன் மற்றும் அவரது குழுவினர் வருகை புரிந்தனர்.

 ஆண் பெண் சமத்துவம் மற்றும் உரையாடல் மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.

ஆறாம் நாள் குன்னத்தூரில் உள்ள வளர் இளம் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் காய்கறி விதைகள் கொடுத்து தோட்டம் அமைக்கும் பணியை செய்து பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பள்ளி மாணவ மாணவர்களுக்கு தேசத்தலைவர்கள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.நஸ்ரத்தில் உள்ள St.தாமஸ் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மனநலம் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் மனநல ஆலோசகர் பிரகதீஸ்வரன் மற்றும் மருத்துவமனை வருகை தந்து வழிப்புணர்வு வழங்கினார்.

இறுதியாக இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிப்பறை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு l சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ சுப்புராமன் ஸ்கோர்( அரசு சார்பற்ற) அமைப்பு வருகை புரிந்த சுற்றுப்புறத் தூய்மை பற்றி எடுத்துரைத்தார்.

 இந்நிகழ்வில் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் பங்கேற்றார்.இந்த ஏழு நாள் கிராம விடியல் முகாமில் சமூகப்பணி துறை முதலாம் ஆண்டை சேர்ந்த 22 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO