ஹீட்டால் வரும் ஹீட் ஸ்ட்ரோக் - தப்புவது எப்படி? மருத்துவர் டிப்ஸ்
தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன அதனை தடுக்கும் வழிமுறைகள் அறிகுறிகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஏகநாதன். ஹீட் ஸ்ட்ரோக் ( வெப்ப அதிர்ச்சி, வெப்பத்தின் காரணமாக எற்படும் பக்கவாதம்). ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு அவசர மருத்துவ நிலை. பொதுவாக இந்நிலையின் போது உடலின் வெப்பநிலை 40C அல்லது அதற்கு மேல் அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் சூரிய வெளிப்பாட்டுக்கு உட்படும் போது ஏற்படும். இதனால் நமது உடல் சாதாரண வெப்ப நிலையை தானாகவே கையாள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது.
பொதுவாக, நமது உடல் அதிக வெப்பநிலையினை வேர்வையின் மூலம் வெளியேற்றி சமநிலைக்கு கொண்டு வரும். ஆனால் இந்நிலையின் போது நமது உடல் அதை செய்ய தவறிவிடுகிறது.இந்த அதிக வெப்பம்-சார்ந்த நோய்கள் பொதுவாக கோடை கால சூழ்நிலையின் போது நீண்ட நேர சூரிய வெளிப்பாட்டினால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும். இந்தியாவில் தற்போதைய காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வெப்பநிலை அதிகரிக்கும் போது ஹீட் ஸ்ட்ரோக்கை சார்ந்த இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என சில ஆய்வு அறிக்கைகள் காட்டுகின்றன.
இதனுடன் தொடர்புடைய முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன, என பார்க்கலாம். ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பின்வரும் பொதுவான அறிகுறிகளில் பலவற்றை கொண்டிருக்கலாம். வேர்வையின்மையுடன் சிவந்த, சூடான, அல்லது வறண்ட சருமம், மூச்சு திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, அதிகரித்த இதய துடிப்பு குழப்பம் எரிச்சலூட்டும் தன்மை.
இதன் முக்கிய காரணங்கள் என்ன? இதற்கான முக்கிய காரணம் சூரியனின் அதிகளவு வெப்பம் தான். முக்கியமாக இந்நிலையானது சூரிய ஒளியில் நாள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வேலை செய்பவர்களையே தாக்குகிறது. ஹீட் ஸ்ட்ரோக்கால் அதிகமாக பாதிக்கப்பட கூடியவர்கள், கைக்குழந்தைகள், முதியவர்கள், வெளிப்புற பணியாளர்கள், பருமனான நபர்கள், மன நோய் உடையவர்கள், மது அருந்துபவர்கள், போதிய திரவ உணவினை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு, இது நீர்ச்சத்துக் குறைவு விளைவிக்கின்றது. இந்த ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய நீங்கள் எடுக்கும் ஆரம்ப படிகளானது அவர்களை நிழலான மற்றும் குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றுவதே ஆகும்.
அதன் பிறகு, நீங்கள் ஈரமான துண்டுகளையோ அல்லது விசிறியினையோ உபயோகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டும். இந்த முதன்மையான கவனிப்புகளுக்கு பிறகு, நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம். மருத்துவமனையில், நோயாளியின் நிலையினை பொறுத்து மருத்துவர் தேவையான சிகிச்சைகளை செய்வார், அதாவது எடுத்துக்காட்டுக்கு மூச்சு திணறல் போன்றவை இருந்தால், அவை உடனடியாக கவனிக்கப்படும். உடல் வெப்ப நிலை இயல்பான வெப்பநிலையை (38०சி) அடையும் வரை மருத்துவர்கள் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு வேண்டிய சிகிச்சைகளை தொடர்வார்கள்.
ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும், அது எப்படி என்று பார்க்கலாமா?
தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் முறையான நீரேற்றத்தை பராமரித்தல். மெலிதான மற்றும் தளர்வான ஆடைகளை அணிதல். சூரிய ஒளியில் குறைந்த நேரத்தை செலவிடுதல் குறிப்பாக அதிக வெப்பம் இருக்கும் வேலைகளான 12:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை வெளியே செல்லுவதை தவிர்த்துக் கொள்ளலாம். அல்லது மிக முக்கியமான வேலை எனில் தொப்பி அல்லது ஸ்கேர்ப் அணிந்துக் கொண்டோ அல்லது குடைப் பயன்படுத்தியாவது சூரியனின் அக்னி கதிர் வீச்சில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த வரையில் கைக்குட்டையை நீரில் நனைத்தவாது முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொள்ளலாம். பருத்தியினால் ஆன ஆடைகளை உடுத்தலாம் அதிக ஆடைகள் உடுத்தாமல் லேசான ஆடைகளை பயன்படுத்தலாம். நமது உடலில் முக்கால் பாகம் நீரினால் ஆனது. அது எப்போது அறுபது சதவீதத்திற்கு குறைகிறதோ அப்போதே இந்த ஹீட் ஸ்ட்ரோக் உங்களைத் தாக்கும். எந்த அளவிற்கு நீங்கள் உங்கள் உடலை நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறீரோ அந்த அளவிற்கு உங்களை இந்த நோய் தாக்காது என்கிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision