இந்தி திணிப்பு கூடாது - திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டத்தில் தீர்மானம்!!

இந்தி திணிப்பு கூடாது - திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டத்தில் தீர்மானம்!!

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் ம. செல்வராஜ், மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் கோ. கலியமூர்த்தி, மாநகர் மாவட்டச் செயலாளர் பேரா. கி. சதீஷ்குமார், பொருளாளர் கோ. ராமராஜ், துணைத் தலைவர் ச. துரைசாமி, துணைச் செயலாளர் பேரா. செம்பை முருகானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.

Advertisement

இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது...."மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பும் அனைத்துக் கடிதங்களும் அந்தந்த மாநில மொழிகளிலோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலோ மட்டுமே தான் அனுப்ப வேண்டும். அதேபோல மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் தகவல் தொடர்புகளும் இதேபோலவே அனுப்ப வேண்டும். இந்தித் திணிப்புக் கூடாது. செம்மொழி உயராய்வு நடுவண் நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். மாறாக மைசூருவில் உள்ள நடுவண் இந்திய மொழிகள் நிறுவனத்துடன் இணைக்கக்கூடாது.

Advertisement

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து கேந்திரிய பள்ளிகளிலும் தாய்மொழித் தமிழைப் பயிற்றுவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தேசிய சட்டப்பள்ளி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நடுவண் அரசு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.‌ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் பிற மாநில மாணவர்கள் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO