பணி சூழல் மற்றும் வீட்டு சூழல் சமாளிப்பது எப்படி??
பணி மற்றும் வீடு இவை இரண்டையும் ஒன்றாக நிர்வகிக்க வேண்டியது என்பது அனைவருக்குமே முக்கியமான திறனாகும். ஆனால் இரண்டையும் ஒன்றாக நாம் நிர்வகிக்கிறோமோ என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக இருக்கும், ஆனால் உங்களுடைய வெற்றியில் கணிசமான இந்த சூழல் உதவும்.
இவையிரண்டையும் நிர்வகிக்க என சில படிநிலைகள் உள்ளது அவற்றை பின்பற்றும் பட்சத்தில் உங்களால் எளிதாக வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி கொள்ள முடியும் என கூறும் மனநல ஆலோசகர் காயத்ரி அவர்கள், இவையிரண்டையும் நிர்வகிப்பதற்கான வழிகளை விளக்குகிறார்.
தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கும் உங்களுடைய தினசரி பணிகளில் இருந்து இரண்டு நாட்களேனும் விடுப்பு எடுங்கள். தற்போது என்னை அழுத்தும் விசயங்கள் என்ன? எனக்கு தேவையானது எவை? நான் எதை முதன்மைப்படுத்துகிறேன்? நான் என்ன தியாகம் செய்கிறேன்? தொலைந்து போவது என்ன? அவை எனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன? என்றெல்லாம் கொஞ்சம் சிந்தியுங்கள், தேவையெனில் சிறிது இடைவெளி விட்டு பின்பு இயல்பாக மாறுங்கள்
முன்னுரிமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள், தற்போது நீங்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்று யோசியுங்கள், அது உங்களுக்கு கண்டிப்பக தேவைதானா என்று யோசித்து பின்பு இல்லையெனில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள். கூடவே உணர்வுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். உங்களுடைய பணிசூழலில் சில நேரங்களில் உங்களுடைய உணர்வுகளுக்கும் முன்னுரிமை அளியுங்கள். பணிநேரங்களில் பணியில் ஈடுபடுங்கள், வீட்டிற்கான நேரங்களில் வீட்டிற்கு செலவழியுங்கள், எந்த நேரங்களில் எதற்கெல்லாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உங்களின் உணர்வுகளின் மூலம் தேர்ந்தெடுங்கள்.
பணி மற்றும் வீட்டு சூழலில் உங்களுடைய நேரங்களுக்கு ஏற்ப மாற்று வழிகளை யோசித்து வையுங்கள். திடீரென ஏற்படும் சில சிக்கலான சூழநிலைகளை கையாள இந்த மாற்று வழிகள் பெரும்பாலும் உங்களுக்கு கை கொடுக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரங்களில் பதட்டப்படாதீர்கள், பொறுமையாக கையாள வேண்டும் என முடிவெடுத்து கொள்ளுங்கள். மேற்கண்ட திறன்கள் மூலம் நீங்கள் இந்த பணி சூழல் மற்றும் வீட்டு சூழலை எளிதாக்கலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision