மலைக் குகைக்குள் இருந்த சிலைகள் - ஆறு வருடங்களுக்குப் பிறகு வெளியே எடுத்து சிறப்பு பூஜை.
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் அருகே உள்ள ரெட்டமலை ஒண்டி கருப்பண்ண சாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். காவல் தெய்வமான ஒண்டி கருப்பண்ணசாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆடி மாத சிறப்பு பூஜை முன்னிட்டு ஒண்டி கருப்பண்ண சாமி கோவிலில் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக ஆறு வருடங்களுக்கு பிறகு மலை குகை கதவின் பூட்டு திறக்கப்பட்டு கோவில் மருளாளிகள் குகைக்குள் படுத்தவாறு ஊர்ந்து உள்ளே சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி அங்கு பாதுகாப்பு வைக்கப்பட்டிருந்த ஒண்டி, காளியம்மன், மதுரை வீரன், அய்யனார் உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வெளியே எடுத்து வந்தனர்.
அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த சிலைகள் பூஜை பொருட்கள் மலை குகைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்படும் எனவும், மீண்டும் கடவுள் உத்தரவு கொடுக்கும் போது தான் மீண்டும் மலை குகை திறக்கப்படும் பூஜைகள் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இத்தகைய வினோதமான பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision