காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு விழா

காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு விழா

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட காங்கிரஸ் அலுவலகம் காட்டூர் கைலாஷ் நகரில் ஏ.ஜெ. எஸ். டவர்சில் அமைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவுக்கு கோட்டத் தலைவர் ராஜா டேனியல் தாய் தலைமை தாங்கினார்.

கோட்ட பொருளாளர் கலியபெருமாள், கோட்ட பொதுச் செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். தேசிய பொதுச்செயலாளர் கிறிஸ்டோபர் திலக் தினசரி நாட்காட்டியினை வெளியிட்டார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில சிறுபான்மை பிரிவு முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதியில் 43 வது வார்டு தலைவர் செபஸ்தியார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மஞ்சதிடல் மணி, ஜோசப், ஆனந்தன் ஷேக் தாவூத், பாலாஜிநகர் பாலு, ஜான்பிரிட்டோ, ராஜாமணி, சம்பத், அன்பு ஆறுமுகம், கருப்பையா, கோட்ட தலைவர்கள் அழகர், பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, எட்வின் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision